உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு ஊழியர்களுக்கு 110 விதியில் அறிவிக்கப்பட்டவை சலுகை அல்ல; போட்டுடைத்த அரசு ஓய்வூதியர் சங்கம்

அரசு ஊழியர்களுக்கு 110 விதியில் அறிவிக்கப்பட்டவை சலுகை அல்ல; போட்டுடைத்த அரசு ஓய்வூதியர் சங்கம்

கோவை: ''அகவிலைப்படி என்பது, ஆண்டுதோறும் அரசு ஊழியர்களுக்கு கட்டாயம் கொடுக்கப்படுவதாகும். அதை, 110 விதியின் கீழ் அறிவித்து, அரசு ஊழியர்களை தி.மு.க., அரசு ஏமாற்றுகிறது,'' என, அரசு ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் பலராமன் தெரிவித்துள்ளார்.நடந்து முடிந்த சட்டசபை கூட்டத்தில், தமிழக முதல்வர் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, ஈட்டிய விடுப்பு, பண்டிகை கால முன்பணம், மகப்பேறு விடுப்பு, உள்ளிட்ட ஒன்பது சலுகைகளை, 110 விதியின் கீழ் அறிவித்துள்ளார். இதற்கு, ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் சங்கம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.இது குறித்து, ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் பலராமன் கூறியிருப்பதாவது:அரசு ஊழியர்கள் அனைவரும், தமிழக அரசிடம் எதிர்பார்ப்பது பழைய ஓய்வூதியத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பதுதான். இதை நிறைவேற்றுவதாக, கடந்த சட்டசபை தேர்தலில் தி.முக., தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.இதை முதல்வர் எப்போது அறிவிப்பார் என்று, அரசு ஊழியர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கின்றனர். அகவிலைப்படி என்பது, ஆண்டுதோறும் அரசு ஊழியர்களுக்கு கட்டாயம் கொடுக்கப்படுவதாகும். புதிதாக கொடுப்பது போல், 110 விதியின் கீழ் அறிவித்து, தி.மு.க., அரசு அரசு ஊழியர்களை ஏமாற்றுகிறது. அதே போல் சரண்டர் விடுப்பு, பண்டிகை கால முன் பணம் இவை எல்லாம் ஏற்கனவே இருப்பதுதான். ஆனால் தொகை அதிகரிக்கப்பட்டு உள்ளது. இது ஒன்றும் சலுகை அல்ல; திருப்பி செலுத்த கூடியவை.பழைய ஓய்வூதிய திட்டத்தை, 110 விதியில் அறிவித்து இருந்தால் சந்தோஷப்படலாம். ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படியை தவிர, வேறு ஒன்றுமில்லை. இதை எல்லாம் அரசு ஊழியர்களுக்கு சலுகையாக வழங்குவது போல், தி.மு.க., அரசு ஒரு மாயையை உருவாக்கி வருகிறது.அரசு ஊழியர்களின் பழைய பென்ஷன் கோரிக்கையை நிறைவேற்றாமல், ஓட்டுப்போட்டு ஜெயிக்க வைத்த அரசு ஊழியர்களை, ஏமாற்றி வருகிறது.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Viji J
மே 09, 2025 01:20

சூப்பர்


reghupathy umashankar
மே 06, 2025 13:37

ஏமாற்று, பொய், பித்தலாட்டம் உன் பெயர் தான் திராவிடமாடலா?


Rajarajan
மே 06, 2025 11:14

முக்கிய அரசுதுறைகளை தவிர, மற்றவற்றை தனியாருக்கு கொடுங்கள் அல்லது இழுத்து மூடுங்கள். அரசு வேலையிலிருந்து ஓய்வுபெற்று பணப்பலன் மற்றும் ஓய்வூதியம் வந்தபின்னர், இவர்கள் சங்கம் பெயரில் செய்யும் அலம்பல் தாங்கவில்லை. தட்டவேண்டிய இடத்தில் தட்டி கட்டாய ஓய்வு கொடுக்கவேண்டும்.


manivannan
மே 06, 2025 10:48

ஏமாற்று வேலை செய்யும் முதல்வர் கண்டிப்பாக ஏமாறுவார். கடந்த சட்டமன்ற தேர்தலில்.. அரசு ஊழியர் ஆசிரியர்களில் வாக்கு வங்கிகளை வாக்குறுதியாக அளித்து பெற்று பதவிக்கட்டில் அமர்ந்த பிறகு இது போன்ற வேலைகளில் ஈடுபட்டால் அதன் பலன் கண்டிப்பாக கிடைக்கும்.....


Thavasuprabhatham Mv
மே 07, 2025 18:11

தேர்தல் முடிவுகள் வரும்போது 2026 தேர்தல் முடிவுகள் மக்களினது தீர்ப்புக்கு காத்திருக்கும் தமிழக அரசு கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள் .அல்லது மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்புகிறது சொல்லாமல் செய்வார் பெரியார் சொல்லிச் செய்வார் சிறியர் சொல்லியும் செய்யாதவர்கள் கயவர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.


புதிய வீடியோ