உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஜிம்னாஸ்டிக்கில் அரசு பள்ளி மாணவர் முதலிடம்

ஜிம்னாஸ்டிக்கில் அரசு பள்ளி மாணவர் முதலிடம்

மேட்டுப்பாளையம் ; வெள்ளியங்காடு அரசு பள்ளி மாணவர், மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்று, முதலிடத்தை பிடித்தார். கோவை மாவட்டம் காரமடை அருகே வெள்ளியங்காட்டில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இதில், 8ம் வகுப்பு படித்து வரும் சஜன் என்ற மாணவர், சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டியில் பள்ளி சார்பில் கலந்து கொண்டார். போட்டியில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்தார். இதையடுத்து கொச்சியில் நடைபெறும் தேசிய அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டியில் கலந்து கொள்ள உள்ளார். பள்ளிக்கு பெருமை சேர்த்த இம்மாணவரை பள்ளி முதல்வர் சாக்ரடீஸ் குலசேகரன், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், உள்ளிட்டோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை