உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விளையாட்டுப் போட்டியில் சாதித்த அரசு பள்ளி மாணவர்கள்

விளையாட்டுப் போட்டியில் சாதித்த அரசு பள்ளி மாணவர்கள்

அன்னுார்; குடியரசு தின விளையாட்டு போட்டியில் எஸ்.எஸ்.குளம் அரசு பள்ளி அதிக இடங்களை வென்றுள்ளது. குறுமைய அளவிலான குடியரசு தின விளையாட்டுப் போட்டிகள் சரவணம்பட்டியில் நடைபெற்று வருகிறது. இதில் சர்க்கார் சாமக்குளம் அரசு மேல்நிலைப் பள்ள மாணவ, மாணவியர் அதிக இடங்களை வென்றுள்ளனர். இப்பள்ளி பிளஸ் 1 மாணவர் சேவியர் 1,500 மீ. மற்றும் 3,000 மீ. ஓட்டத்தில், முதலிடம் பெற்றுள்ளார். இப்பள்ளி பிளஸ் 2 மாணவர் அபிலாஷ், உயரம் தாண்டுதல் மற்றும் மும்முறை தாண்டுதலில் முதலிடம் பெற்றுள்ளார். 19 வயதுக்கு உட்பட்ட மாணவர் பிரிவில், இப்பள்ளி அணி கபடியில் முதலிடம் பெற்றுள்ளது. 19 வயது மாணவியர் பிரிவில், இரட்டையர் பிரிவில் முதலிடம் பெற்றுள்ளது. இதே பிரிவில் ஒற்றையர் பிரிவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. 14 வயது, 17 வயது மாணவர் பிரிவிலும், 17 வயது, 19 வயது மாணவியர் பிரிவிலும், டேபிள் டென்னிஸ் போட்டியில் குறுமைய அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளது. சாதித்த, மாணவ, மாணவியருக்கு, பள்ளி தலைமையாசிரியை விமலா மற்றும் கல்விக் குழு உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி