உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு சுவரில் போட்டி போட்டு விளம்பரம்; அலங்கோலமாவதை தடுக்கணும்

அரசு சுவரில் போட்டி போட்டு விளம்பரம்; அலங்கோலமாவதை தடுக்கணும்

வால்பாறை; அரசு சுவர்களில் அரசியல் கட்சியினர் போட்டி போட்டுக்கொண்டு, சுவர் விளம்பரம் செய்வதால், அலங்கோலமாக காட்சியளிக்கிறது. வால்பாறை - பொள்ளாச்சி ரோட்டில் உள்ள நெடுஞ்சாலைத்துறை ரோட்டில், தி.மு.க.,வினர் கட்சி விளம்பரங்களை எழுதியுள்ளனர். குறிப்பாக, ஆழியாறிலிருந்து வால்பாறை வரும் வழியில், நெடுஞ்சாலைத்துறை ரோட்டில் உள்ள தடுப்புச்சுவர்களில், விளம்பரம் எழுதி அலங்கோலப்படுத்தியுள்ளனர். இதே போல், வால்பாறை நகரில் அ.தி.மு.க.,வினர் நெடுஞ்சாலைத்துறை ரோடு, பயணியர் நிழற்கூரைகளில் விதிமுறை மீறி, போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். தி.மு.க., -- அ.தி.மு.க., -- நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், போட்டி போட்டுக்கொண்டு, அரசு சுவர்களில் விளம்பரம் செய்வதால், பல லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட தடுப்புச்சுவர்கள், பயணியர் நிழற்கூரைகள் அலங்கோலமாக காட்சியளிக்கிறது. பொதுமக்கள் கூறியதாவது: வால்பாறைக்கு தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்லும் நிலையில், விதிமுறை மீறி சுவர்களில் எழுதப்பட்டுள்ள விளம்பரங்களால், வாகன ஓட்டுநர்களுக்கு கவனச்சிதறல் ஏற்பட்டு விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. அரசு சுவர்களில் விதிமுறை மீறி ஒட்டப்பட்டுள்ள, விளம்பர போஸ்டர்கள், சுவர் விளம்பரங்களையும் உடனடியாக அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். விளம்பர போஸ்டர்களை அகற்றி, வெள்ளை வர்ணம் பூச வேண்டும். அதற்கான தொகையை விளம்பரம் செய்துள்ள கட்சி நிர்வாகிகளிடமே வசூலிக்க வேண்டும். இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை