உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு நலத் திட்டங்கள் முடக்கம்; மாஜி அமைச்சர் புத்திசந்திரன் பேச்சு

அரசு நலத் திட்டங்கள் முடக்கம்; மாஜி அமைச்சர் புத்திசந்திரன் பேச்சு

கோவில்பாளையம்; 'அ.தி.மு.க., அரசின் நலத்திட்டங்களை தி.மு.க., அரசு முடக்கி விட்டது,' என முன்னாள் அமைச்சர் புத்தி சந்திரன் பொதுக்கூட்டத்தில் பேசினார்.கீரணத்தத்தில், கவுண்டம்பாளையம் தொகுதி அ.தி.மு.க., சார்பில், மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. கோவை வடக்கு மாவட்டச் செயலாளர் அருண்குமார் தலைமை வகித்தார்.முன்னாள் அமைச்சர் புத்தி சந்திரன் பேசுகையில், அ.தி.மு.க., ஆட்சியின் போது, பொங்கலுக்கு, ரேஷன் கார்டுதாரர்களுக்கு, தலா 2,500 ரூபாய் வழங்கப்பட்டது. தி.மு.க., ஒரு ரூபாய் கூட தரவில்லை. தாலிக்கு தங்கம் திட்டத்தில், ஒவ்வொரு ஆண்டும், பல ஆயிரம் பெண்களின் திருமணத்திற்கு, தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டது. அந்தத் திட்டத்தையும் நிறுத்தி விட்டனர். மாணவர்களுக்கு 'லேப் டாப்' வழங்குவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தி.மு.க., அரசு முடக்கி விட்டது, என்றார். மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ., செல்வராஜ் உள்பட பலர் எம்.ஜி.ஆரின் சாதனைகள் குறித்து பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ