உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவிந்தாபுரம் ரோடு விரிவாக்கம் மரங்கள் மறுநடவுப்பணி தீவிரம்

கோவிந்தாபுரம் ரோடு விரிவாக்கம் மரங்கள் மறுநடவுப்பணி தீவிரம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, கணபதிபாளையம் - கோவிந்தாபுரம் ரோடு விரிவாக்கத்துக்காக மரங்கள் மறுநடவு செய்யும் பணி நடக்கிறது.அவிநாசி - திருப்பூர் - பல்லடம் - பொள்ளாச்சி - கொச்சின் (வழி) மீன்கரை ரோட்டில் காட்டம்பட்டி, நெகமம், புளியம்பட்டி, மீனாட்சிபுரம் பகுதிகளில், இருவழிச்சாலை, நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணிக்கு, நிர்வாக ஒப்புதல் தமிழக முதல்வரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 37 கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளது.அதில், பொள்ளாச்சி நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்டத்துக்கு உட்பட்ட புளியம்பட்டி பகுதியில், 600 மீட்டர் சாலை பகுதி நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இப்பணிக்கு இடையூறாக உள்ள, 22 மரங்கள் கண்டறியப்பட்டு மறு நடவு செய்ய வாய்ப்புள்ள, 17 மரங்கள் மறு நடவு செய்யப்பட்டன.இந்நிலையில், மீனாட்சிபுரம் ரயில்வே கேட் முதல் கணபதிபாளையம் வரை முதல் கட்டமாக, நான்கு வழிச்சாலையாக விரிவுப்படுத்தப்பட்டது. தொடர்ந்து, கணபதிபாளையம் முதல், கோவிந்தாபுரம் வரை, 14 மீட்டருக்கு நான்கு வழிச்சாலையாக மாற்றப்படுகிறது.ரோடு விரிவாக்கத்துக்காக, அங்கு இருந்த மரங்கள் மறு நடவு செய்யும் பணியில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மரங்கள் மறு நடவு சிறப்பு நிபுணர் சையத் மற்றும் இயற்கை ஆர்வலர்களுடன் இணைந்து இப்பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'ரோடு விரிவாக்கத்துக்காக மொத்தம், 60 மரங்கள் கண்டறியப்பட்டு மறு நடவு செய்யப்படுகின்றன. மரங்களை வெட்டாமல் அவற்றை பாதுகாப்பாக மாற்று இடத்தில் நடவு செய்யப்படுகிறது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி