அரசு மகளிர் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
கோவை; கோவை புலியகுளம் அரசு மகளிர் கலை, அறிவியல் கல்லுாரியின் முதல் மற்றும் இரண்டாம் பட்டமளிப்பு விழா, கல்லுாரி வளாகத்தில் நேற்று நடந்தது. கடந்த இரு ஆண்டுகள் பட்டப்படிப்பை முடித்த, 345 மாணவியருக்கு மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், பட்டங்களை வழங்கினார். விழாவுக்கு, கல்லுாரி முதல்வர் வீரமணி தலைமை வகித்தார்.