உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சம்பிரதாயத்துக்கு நடந்த கிராமசபை கூட்டம்

சம்பிரதாயத்துக்கு நடந்த கிராமசபை கூட்டம்

தொண்டாமுத்துார் : தொண்டாமுத்துார் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சிகளில் நடந்த கிராமசபை கூட்டத்தில், மக்கள் குறைந்த எண்ணிக்கையில் கலந்து கொண்டனர்.தொண்டாமுத்துார் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பேரூர் செட்டிபாளையம், தீத்திபாளையம், மாதம்பட்டி, மத்வராயபுரம், இக்கரை போளுவாம்பட்டி, ஜாகீர்நாயக்கன்பாளையம், நரசீபுரம், வெள்ளிமலைபட்டிணம், தேவராயபுரம், தென்னமநல்லுார் ஆகிய, 10 ஊராட்சி அலுவலகங்களில், தொழிலாளர் தினத்தையொட்டி, நேற்று கிராமசபை கூட்டம் நடந்தது.ஊராட்சிகளின் வரவு, செலவு கணக்குகள், புதிய திட்டங்கள், மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து பொதுமக்களுக்கு, ஊராட்சி செயலர்கள் எடுத்துரைத்தனர். 10 ஊராட்சிகளிலும், போதிய கோரம் இல்லாமல், அதிகபட்சமாக, 30 பேர் மட்டுமே, கிராம சபையில் கலந்துகொண்டதால், சம்பிரதாயத்துக்காக கூட்டம் நடத்தப்பட்டது.போதிய கூட்டம் இல்லாததால், பொதுமக்களிடம் புகார்களும் அதிகளவு பெறப்படவில்லை. தற்போது, ஊராட்சிகளில், மக்கள் பிரதிநிதிகள் இல்லாததால், கிராம சபை கூட்டங்கள் குறித்து மக்களிடம் அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி