உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  பெயரளவுக்கு நடந்த கிராம சபை கூட்டங்கள்

 பெயரளவுக்கு நடந்த கிராம சபை கூட்டங்கள்

சூலூர்: குடியரசு தினத்தையொட்டி, சூலூர் வட்டாரத்தில் உள்ள, 17 ஊராட்சிகளில் நேற்று கிராம சபை கூட்டங்கள் நடந்தன. * காங்கயம்பாளையத்தில் நடந்த கூட்டத்தில், கோயமுத்தூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். வக்கீல் பிரேமலதா மற்றும் நாகராஜன் ஆகியோர், சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் பணிகள் குறித்து விளக்கினர். * கிட்டாம்பாளையத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் முன்னாள் தலைவர் சந்திரசேகர், முன்னாள் வார்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர். 100 நாள் வேலை உறுதி திட்டத்தின் பெயரை மாற்றக்கூடாது என, மனு அளித்தனர். * கரவழி மாதப்பூரில் கிராம சபை கூட்டம் நடந்ததாக அதிகாரிகள் தரப்பிலும், கோரம் இல்லாததால், கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக பொதுமக்களில் ஒரு தரப்பினரும் கூறியதால், குழப்பம் ஏற்பட்டது. இதேபோல், மற்ற ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் பெயரளவுக்கு நடந்து முடிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ