உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / துவக்கப்பள்ளியில் அருமையான முயற்சி

துவக்கப்பள்ளியில் அருமையான முயற்சி

கோவை, : கோவை என்.ஹெச்.ரோட்டில் உள்ள, புனித சேவியர் துவக்கப்பள்ளியில் வாசிப்பு மன்றம் துவங்கப்பட்டுள்ளது.இது குறித்து, பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆரோக்கிய தனபாக்கியம் கூறியதாவது: மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்த அன்றாட நிகழ்வுகளைத் தெரிந்து கொள்ளும் வகையிலும், பல நல்லொழுக்க கதைகளை அறிந்து கொள்ளும் வகையிலும், அறிவியல் சார்ந்த புதுப்புது கருத்துக்கள் கற்பிக்கப்படுகின்றன.மாணவர்கள் படித்த விஷயங்களை நினைவுபடுத்தி, மற்ற மாணவர்களிடையே பகிர்ந்து கொள்வது மூலம் பல நல்ல கருத்துக்களை தெரிந்து கொள்ள முடியும். இதில் குழந்தைகள் வாரம் ஒரு புத்தகம் என்று தாங்கள் படித்ததை, நினைவுபடுத்தி வாசிப்பு மன்றத்தில் வாரம் ஒரு முறை கலந்துரையாடல் மூலம் பரிமாறிக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ