மேலும் செய்திகள்
புலி தாக்கி சினை பசு பலி
19-Jul-2025
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே சிறுக்களந்தை விக்னேஷ்வர் வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளியில், பச்சை நிறத்தின் முக்கியத்துவத்தையும், இயற்கையை பாதுகாப்பதன் அவசியத்தையும் வலியுறுத்தி பசுமை தினம் கொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளர் சரோஜினி தலைமை வகித்தார். குழந்தைகள் பச்சை நிற உடைகள் அணிந்து கொண்டு பள்ளிக்கு வந்தனர். வகுப்பறைகள் பச்சை பலுான்கள், பிற அலங்கார பொருட்களால் அலங்கரிக்கப்பட்டன. பசுமை தினம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், போட்டிகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து, மரக்கன்றுகளும் நடப்பட்டன. தவிர, மரம் வளர்ப்பதன் அவசியம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பள்ளி இயக்குனர்கள் சாந்தி, உமாராணி, முதல்வர் வெங்கடாசலம், ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
19-Jul-2025