உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பசுந்தாள் உரம் விநியோகம் நிறுத்தம்

பசுந்தாள் உரம் விநியோகம் நிறுத்தம்

அன்னுார்; அரசு வழங்கி வந்த பசுந்தாள் உரம் நிறுத்தப்பட்டதால் கூடுதல் விலை கொடுத்து வெளிச்சந்தையில் விவசாயிகள் வாங்குகின்றனர். அன்னுார் வட்டாரத்தில், வாழை, கரும்பு, மஞ்சள், புகையிலை, நிலக்கடலை, காய்கறி மற்றும் பயறு வகைகள் 20 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் பயிரிடப்பட்டு வருகின்றன. இவற்றில் மண்ணின் வளத்தை மேம்படுத்தும் பசுந்தாள் உரம் கிடைப்பது குறைந்துவிட்டது. இதுகுறித்து தாசபாளையம் விவசாயிகள் கூறுகையில், 'பசுந்தாள் உரம் இடுவதால் மண்ணின் வளம் மேம்படுகிறது. விளைச்சல் அதிகரிக்கிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழக அரசு மானிய விலையில் பசுந்தாள் உரம் விவசாயிகளுக்கு வழங்கி வந்தது. கடந்த மூன்று ஆண்டுகளாக வழங்குவதில்லை. இதனால் வெளிச்சந்தையில் ஒரு கிலோ 150 ரூபாய்க்கு ஈரோடு மாவட்டத்தில் வாங்க வேண்டி உள்ளது. அரசு, விவசாயிகளுக்கு உதவ மானிய விலையில் பசுந்தாள் உரம் விநியோகிக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி