தபால் ஓய்வூதியர்களுக்கு பிப்., 6ல் குறைதீர் கூட்டம்
பொள்ளாச்சி,; தபால் ஓய்வூதியர்கள் குறைதீர் கூட்டம், காணொலி வாயிலாக, வரும், 6ம் தேதி நடக்கிறது.பொள்ளாச்சி தபால் கோட்ட கண்காணிப்பாளர் சாந்தினி பேகம் அறிக்கை:கடந்தாண்டு டிச., 31ல் முடியக்கூடிய அரையாண்டுக்கான, மேற்கு மண்டல அளவிலான, ஒய்வூதியர்கள் குறைதீர் கூட்டம் வரும், பிப்., 6ம் தேதி காணொலி வாயிலாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.குறைதீர் கூட்டத்தில் ஆலோசிப்பதற்கான குறைகளை, ஆலோசனைகளை தபாலிலோ அல்லது மின்னஞ்சல் வாயிலாகவோ அனுப்பலாம்.அனுப்ப வேண்டிய முகவரி: 'அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம், பொள்ளாச்சி கோட்டம், பொள்ளாச்சி, 642001, என்றும், உறையின் மீது, 'மண்டல பென்ஷன் அதாலத்' என்று குறிப்பிடப்பட்டு இருக்க வேண்டும். மின்னஞ்சல் அனுப்புவதற்கு, 'dopllachi.indiapost.gov.in'க்கு, மின்னஞ்சலின் பொருளில், 'பென்ஷன் அதாலத்' என்று குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.புகார்கள், ஆலோசனைகளை வரும், 30ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். கோட்ட அலுவலகத்தினால் தீர்க்கப்படாத குறைகளை மட்டும் கோட்ட அலுவலகத்தில் இருந்து பெறப்பட்ட பதிலுடன், இந்த குறைதீர் கூட்டத்துக்கு ஓய்வூதியதாரர்கள் அனுப்பலாம்.சட்ட ரீதியான குறைகள், கொள்கை சம்பந்தப்பட்ட குறைகளை அதாலத்தில் எடுத்துக்கொள்ள முடியாது.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.