நிலக்கடலை ஏல விற்பனை
அன்னுார்; அன்னூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நாளை (7ம் தேதி) முதல் நிலக்கடலை ஏல விற்பனை நடக்கிறது. விவசாயிகள் எந்த கமிஷனும் தராமல் விற்பனை செய்யலாம். இங்குள்ள குடோன்களில் இருப்பு வைத்தும் விற்கலாம். விவசாயிகள் வரும்போது தங்கள் வங்கி கணக்கு புத்தக நகல் மற்றும் ஆதார் நகல் கொண்டு வர வேண்டும். என, கோவை விற்பனை குழு முதுநிலை செயலாளர் ஆறுமுக ராஜன் தெரிவித்துள்ளார்.