உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரேஷன் அரிசி கடத்தியவர் மீது 2வது முறையாக குண்டாஸ்

ரேஷன் அரிசி கடத்தியவர் மீது 2வது முறையாக குண்டாஸ்

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, ரேஷன் அரிசி கடத்தலில் தொடர்ந்து ஈடுபட்ட நபர் மீது இரண்டாவது முறையாக குண்டர் சட்டம் பாய்ந்தது. பொள்ளாச்சி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை எஸ்.ஐ., பூங்கொடி மற்றும் குழுவினர், பொள்ளாச்சி, கோட்டூர், சேத்துமடை ரோடு அருகே கடந்த, 12ம் தேதி ரோந்து சென்றனர். அப்போது, சீலக்காம்பட்டி மலையாண்டிப்பட்டணத்தை சேர்ந்த கவின்குமார்,23, என்பவர், 2.5 டன் அரிசியை வாகனத்தில் கேரளாவுக்கு கடத்திச் சென்று கள்ளச்சந்தையில் விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். கவின்குமார் மீது ஏற்கனவே ரேஷன் அரிசி கடத்திய குற்றத்துக்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுத்தும் தொடர்ந்து ஈடுபட்டுள்ளார். இதையடுத்து, கவின்குமார் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கோவை மாவட்ட கலெக்டருக்கு இன்ஸ்பெக்டர் முரளிதரன் பரிந்துரை செய்தார். அதன்பேரில், கவின்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து, உத்தரவு நகல், கோவை மத்திய சிறையில் உள்ள கவின்குமாருக்கு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ