உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சாந்தலிங்க ராமசாமி அடிகளாரின் குருபூஜை

சாந்தலிங்க ராமசாமி அடிகளாரின் குருபூஜை

தொண்டாமுத்துார்; பேரூர் ஆதினம் சாந்தலிங்க ராமசாமி அடிகளாரின், 7ம் ஆண்டு குருபூஜை வழிபாடு, பேரூர் ஆதின மடத்தில் நேற்று நடந்தது. பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் தலைமையில் வேள்வி பூஜை நடந்தது. சாந்தலிங்க ராமசாமி அடிகளாரின் சன்னதியில், திருமஞ்சனம், சாந்தலிங்க ராமசாமி எழுதிய பாடல்களின் பாராயணம், பேரொளி வழிபாடு நடந்தது. சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள், தென்சேரிமலை ஆதினம் முத்து சிவராமசாமி அடிகளார் மற்றும் துறவியர் பலர் பங்கேற்றனர். நிறைவில், அன்னம் பாலிப்பு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !