உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மகாலிங்கம் பொறியியல் கல்லுாரியில் ேஹக்கத்தான் 1.O போட்டி நிறைவு

மகாலிங்கம் பொறியியல் கல்லுாரியில் ேஹக்கத்தான் 1.O போட்டி நிறைவு

பொள்ளாச்சி; பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லுாரி மற்றும் சக்தி குழும நிறுவனங்கள் சார்பில், தேசிய அளவிலான கல்லுாரிகளுக்கு இடையேயான தொழில்நுட்ப போட்டியான, 'ேஹக்கத்தான் 1.O' நேற்றுமுன்தினம் துவங்கி இருநாட்கள் நடந்தது. மாணவர் ஆராய்ச்சி மன்ற தலைவர் சுதாகர் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் கோவிந்தசாமி தலைமை வகித்தார்.கல்லுாரியின் முன்னாள் மாணவர் கிருஷ்ணராஜ் நடராஜ், ேஹக்கத்தான் புதுமை, நடைமுறை கற்றலுக்கான தளங்கள் எனக்கூறி வணிக மாதிரி புதுமை மற்றும் விரிவாக்கத்தின் அவசியத்தை வலியுறுத்தினார். தமிழக வழிகாட்டுதல் துறை துணை தலைவர் விக்ராந்த் சத்தியமூர்த்தி, நிஜ வாழ்க்கை பிரச்னைகளை அடையாளம் காணும் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். துணை முதல்வர் செந்தில்குமார், ேஹக்கத்தான் முடிவுகளை அறிவித்தார். திருவள்ளுவர் ஆர்.எம்.டி. பொறியியல் கல்லுாரி கிருஷ்ண விஷ்வா மற்றும் குழு முதலிடம் பிடித்து, ஒரு லட்சம் ரூபாய் பரிசை பெற்றனர்.பி.எஸ்.ஜி. தொழில்நுட்ப கல்லுாரி பிரியாதர்ஷினி மற்றும் குழுவுக்கு இரண்டாம் பரிசாக, 50ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. மகாலிங்கம் பொறியியல் கல்லுாரி அருண் தர்ஷன் மற்றும் குழுவினர், மூன்றாம் பரிசாக, 25 ஆயிரம் ரூபாய் பெற்றனர். ஆறுதல் பரிசாக, கொங்கு பொறியியல் கல்லுாரி, கிருஷ்ணா பொறியியல் கல்லுாரி, பி.ஏ.சி.இ. தொழில்நுட்ப கல்லுாரி, கோவை தொழில்நுட்ப கல்லுாரி, பன்னாரி தொழில்நுட்ப கல்லுாரி என ஐந்து, அணிகளுக்கு, தலா ஐந்தாயிரம் ரூபாய் வீதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை