உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கே.பி.ஆர்., கல்லுாரியில் ஹேக்கத்தான் போட்டி

கே.பி.ஆர்., கல்லுாரியில் ஹேக்கத்தான் போட்டி

கோவை;கே.பி.ஆர்., கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரி, 'ஸ்டார்ட் அப் டி.என்., காக்னிசென்ட் சார்பில் ஹேக்கத்தான் போட்டி கல்லுாரி வளாகத்தில் நடந்தது.கல்லுாரி முதல்வர் கீதா தலைமை வகித்தார்.நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா, ஆந்திரா, பாண்டிச்சேரி, ஒடிசா, மேற்கு வங்கம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த சுமார் 56 கல்லூரிகளை சார்ந்த 733 மாணவர்கள், 177 குழுக்களாக பங்கேற்றனர்.கோவை மாவட்ட நிர்வாக அமைப்பின் மூலம் பரிந்துரைக்கப்பட்ட, கோவை மாநகரில் உள்ள பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் பென்பொருள்கள் உருவாக்கும் வகையில் இந்த போட்டி நடந்தது.மூன்று சுற்றுகளாக நடந்த போட்டியில், எஸ்.ஆர்.எம்., அறிவியல் மற்றும் தொழில் நுட்பக்கல்லூரி, பிஷப் ஹெப்பர் கல்லுாரி, மணக்குளம் விநாயகர் பொறியியல் கல்லுாரி, சென்னை பொறியியல் கல்லுாரி, செயின்ட் ஜோசப் தொழில்நுட்பக் கல்லுாரிகள் வெற்றி பெற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ