உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரோட்டில் தொங்கும் மின்விளக்கு; விபத்து ஏற்படும் அபாயம்

ரோட்டில் தொங்கும் மின்விளக்கு; விபத்து ஏற்படும் அபாயம்

ரோட்டோர கழிவு

பொள்ளாச்சி -- கோவை தேசிய நெடுஞ்சாலையில், தாமரைக்குளம் பகுதியில் ரோட்டோரத்தில் தனியார் கம்பெனி கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே இங்கு கொட்டப்பட்டுள்ள குப்பையை அகற்றம் செய்து குப்பை கொட்டுபவர்கள் மீது ஊராட்சி நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.- - குமார், தாமரைக்குளம்.

மீண்டும் சேதம்

கிணத்துக்கடவு, சிக்கலாம்பாளையம் பிரிவில் (பொள்ளாச்சி வழி) சர்வீஸ் ரோட்டின் நடுவே பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதை தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் அடிக்கடி சரி செய்தாலும் மீண்டும் மீண்டும் இப்பிரச்னை ஏற்படுகிறது. இதை நிரந்தரமாக சரி செய்ய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.-- செந்தில், கிணத்துக்கடவு.

சேதமடைந்த கட்டடங்கள்

உடுமலை நகராட்சி சந்தையில் சேதமடைந்த கட்டடங்கள் அகற்றப்படாமல் உள்ளது. இதனால், அப்பகுதியில் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே, நகராட்சியினர் சேதமடைந்த கட்டடங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.- மோகன், உடுமலை.

அடிக்கடி மின்வெட்டு

நெகமம் காட்டம்பட்டிபுதூர் பகுதியில் கடந்த சில நாட்களாக, நாளொன்றுக்கு 15 முறை மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் பலதரப்பட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே, மக்கள் நலன் கருதி பிரச்னையை மின்வாரிய துறையினர் உடனடியாக சரி செய்ய வேண்டும்.-- சுரேஷ், நெகமம்.

ரோட்டில் சேதம்

பொள்ளாச்சி, கோவை ரோடு நெடுஞ்சாலை துறை அலுவலகம் முன் ரோடு ஆங்காங்கே சேதமடைந்து உள்ளது. பகுதியில் இரவு நேர பயணத்தின் போது இருசக்கர வாகன ஓட்டுநர்கள் அதிக அளவு தடுமாறுகின்றனர். எனவே, இந்த ரோட்டை விரைவில் சீரமைப்பு செய்ய வேண்டும்.- - டேவிட், பொள்ளாச்சி.

ரோட்டில் எண்ணெய் கழிவு

உடுமலை, சர்தார் வீதி நால்ரோடு சந்திப்பில் உள்ள உணவகத்தில் திறந்த வெளியில் உணவு சமைப்பதால் அதன் எண்ணெய் கழிவுகள் ரோட்டில் தேங்குகிறது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டுநர்கள் அப்பகுதியில் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர். மேலும் அப்பகுதியில் நடந்துசெல்வோரும் ரோடு வழுக்கி தடுமாறி விழுகின்றனர்.- ராஜா, உடுமலை.

பராமரிப்பில்லாத பூங்கா

உடுமலை நகராட்சி ஸ்ரீ நகர் பூங்கா பராமரிப்பின்றி உள்ளது. இதனால், குழந்தைகள், பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பூங்காவை பராமரித்து சீரமைக்க நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- முருகன், உடுமலை.

தெருநாய்கள் தொல்லை

உடுமலை, வ.உ.சி.வீதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. தெருநாய்கள் ரோட்டில் அங்குமிங்குமாய் சுற்றுவதால் வாகன ஓட்டுநர்கள் அவ்வழியாக செல்வதற்கு இடையூறாக உள்ளது. மேலும் ரோட்டில் செல்பவர்களை அச்சுறுத்தி துரத்துவதால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.- நந்தினி, உடுமலை.

அடையாளம் இல்லை

உடுமலை, ஜஸ்வர்யா நகரில் வேகத்தடைகள் அடையாளம் இல்லாமல் உள்ளது. இரவு நேரங்களில் வாகனங்கள் அதிவேகத்துடன் செல்லும்போது கட்டுப்பாடில்லாமல் விபத்துக்குள்ளாகின்றன. அப்பகுதியின் கிளை ரோடுகளிலிருந்து வரும் வாகனங்களும் அதிவேகமாக வருவோரால் விபத்துக்குள்ளாகின்றன.- சதீஸ்குமார், உடுமலை.

விதிமீறும் வாகனங்கள்

உடுமலை, பஸ் ஸ்டாண்டில் இரு சக்கர வாகன ஓட்டுநர்கள் அதிகம் உலா வருகின்றனர். இவ்வாறு வருவோரால் பயணியர் பஸ்களுக்கு செல்வதற்கு இடையூறாக உள்ளது. மேலும், வாகனங்கள் வேகமாகவும் பஸ் ஸ்டாண்டில் செல்கின்றன. இதனால் பயணியர் பாதுகாப்பாக நடந்துசெல்வதற்கும் வழியில்லாமல் உள்ளது.- ஜெயக்குமார், உடுமலை.

தொங்கும் மின் விளக்கு

தாமரைக்குளம் - - நல்லட்டிபாளையம் செல்லும் ரோட்டில் மின் கம்பத்தில் இருக்கும் மின்விளக்கு தொங்கிய நிலையில் உள்ளது. இது எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் தருவாயில் இருப்பதால், மின்வாரியத்தினர், இதை கவனித்து உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.- பாலாஜி, நெகமம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை