மேலும் செய்திகள்
பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு
29-Apr-2025
கோவை: தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கம், கோவை மாவட்டம் சார்பில், தலைமை ஆசிரியர்களுக்கான பணி நிறைவு விழா, கோவை புனித மைக்கேல் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது.விழாவில், கோவை மாவட்ட இடைநிலை கல்வி அலுவலர் கோமதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, ''ஆசிரியர் பணி என்பது ஒரே ஒரு தொழில் அல்ல; அது ஒரு மாபெரும் சேவை. வாழ்க்கையை மாற்றும், சமுதாயத்துக்கு ஒளி வழங்கும் வழிகாட்டிகளே ஆசிரியர்கள்,” என பேசினார்.விழாவின் தொடக்கமாக, பணி நிறைவு பெற்ற ஆசிரியர்கள் தங்கள் சேவையை நினைவு கூர்ந்து, உரை நிகழ்த்தினர். விழா நிறைவில், மாவட்ட இணைச் செயலாளர் பிரபாகரன் நன்றியுரை ஆற்றினார்.
29-Apr-2025