மேலும் செய்திகள்
கொட்டி தீர்த்த கன மழை குன்னுார் ஆற்றில் வெள்ளம்
13-May-2025
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம், துடியலூர், சின்னதடாகம் வட்டாரத்தில் நேற்று மதியம் கனமழை பெய்தது.நேற்று காலை முதல் மதியம் வரை கடும் வெப்பம் நிலவியது. மதியம், 3:00 மணிக்கு பிறகு வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சிறிது நேரத்தில் காற்றுடன் சுமார் அரை மணி நேரம் கன மழை பெய்தது. இதனால் ரோட்டில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மழை காரணமாக காலை முதல் மதியம் வரை நிலவிய கடும் வெப்பம், மழை பெய்ததால், வெப்பம் குறைந்து, இதமான சூழ்நிலை உருவானது. இது குறித்து விவசாயிகள் கூறுகையில்,' கோடை மழை பெய்ததால், உழவர்கள், காய்ந்து கிடக்கும் தங்களுடைய நிலத்தை ஆழமாக உழவு செய்வது நல்லது. நிலத்தில் தண்ணீர் நன்றாக ஊடுருவி மண் நன்றாக பொல, பொலப்பாகி காய்கறி உள்ளிட்ட பயிர்கள் நன்றாக விளைய ஏதுவாகும். மேலும், தற்போது பெய்த மழையால் தென்னை, வாழை உள்ளிட்ட மர பயிர்கள் செழிப்படையும். காய்கறி விளைச்சலுக்கும் இம்மழை உதவியாக இருக்கும்' என்றனர்.
13-May-2025