உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நான்கு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

நான்கு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

கோவை: கோவை மாவட்டத்தில், வரும் நான்கு நாட்களுக்கு மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. வேளாண் காலநிலை ஆராய்ச்சி நிலைய தலைவர் சத்தியமூர்த்தி அறிக்கை: வரும் 26ம் தேதி வரை, கோவை மாவட்டத்தில் மிதமானது முதல் கனமானது வரை மழைப்பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கத்தை விட வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை குறையலாம். காற்றின் வேகம் மணிக்கு 6 முதல் 22 கி.மீ., வரை வீசக்கூடும். கோவை மாவட்டத்தில் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்யக்கூடும் என்பதால், கால்நடைகளை மலையோரப் பகுதிகளுக்கு மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டாம். சம்பா நெல்லுக்கு போதுமான வடிகால் வசதி செய்யவும். புதிய நடவை ஒரு வாரத்துக்கு ஒத்தி வைக்கவும். கம்பு, சோளத்தில், இடைவெளி நிரப்பி, பாடுவாசி பராமரிக்கவும். மழை பெய்யும் என்பதால், பூச்சிக்கொல்லி, மருந்து தெளிப்பது, உரமிடல், பாசன வசதியை ஒத்தி வைக்கவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை