உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இடியுடன் கனமழை; கீழ்நீராறில் 40 மி.மீ.,

இடியுடன் கனமழை; கீழ்நீராறில் 40 மி.மீ.,

வால்பாறை, ; வால்பாறையில் இடியுடன் கனமழை பெய்த நிலையில், கீழ்நீராறில், 40 மி.மீ. மழை பெய்துள்ளது.வால்பாறையில் கடந்த சில மாதங்களாக மழைப்பொழிவு முற்றிலுமாக குறைந்து பனிப்பொழிவு அதிகரித்ததால், தேயிலை செடிகள் பல இடங்களில் கருகின. பி.ஏ.பி., அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து வெகுவாக குறைந்ததோடு, அணைகளின் நீர்மட்டமும் வேகமாக சரிந்து வருகிறது.இந்நிலையில், வால்பாறையில் கடந்த ஒரு வாரமாக லேசான சாரல்மழை பெய்து வந்தது. நேற்று முன்தினம் மாலை இடியுடன் கனமழை பெய்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டதோடு, பல இடங்களில் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. இடையிடையே கோடை மழை பெய்து வருவதால் வால்பாறையில் தேயிலை செடிகள் மீண்டும் துளிர்விடத்துவங்கியுள்ளதால், தேயிலை விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.நேற்று காலை, 8:00 மணி வரை பதிவான மழை அளவு (மி.மீ.,): வால்பாறை - 3, மேல்நீராறு - 4, கீழ்நீராறு - 40, பொள்ளாச்சி - 3 என்ற அளவில் மழை பெய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ