உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஹெலிகாப்டரில் சென்று தீயை அணைக்க பயிற்சி

ஹெலிகாப்டரில் சென்று தீயை அணைக்க பயிற்சி

சூலூர்: ஹெலிகாப்டரில் சென்று, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபடும் பயிற்சியில் வீரர்கள் ஈடுபட்டனர். சூலூர் அடுத்த காங்கயம்பாளையத்தில் விமானப்படைத் தளம் உள்ளது. இங்கு, போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் உள்ளன. இங்குள்ள வீரர்கள் தினமும் பல்வேறு பயிற்சிகளில் ஈடுபடுவது வழக்கம். பேரிடர் காலங்களில் பல்வேறு பகுதிகளுக்கு ஹெலிகாப்டரில் சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வனப்பகுதியில் தீ விபத்து ஏற்படும்போது, ஹெலிகாப்டரில் சென்று மீட்பு மற்றும் தீயணைப்புப் பணியில் ஈடுபடும் பயிற்சியில் ஈடுபட்டனர். ஹெலிகாப்டரில் வந்த வீரர்கள், சூலூர் பெரிய குளத்தில் இருந்து, தண்ணீரை பெரிய கலனில் எடுத்து, தீ விபத்துக்குள்ளான இடத்துக்குச் சென்று நீரை ஊற்றி, தீயை அணைக்கும் பயிற்சியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி