ஹெல்மெட்டால் தாக்கியவர் கைது
கோவை: தெலுங்குபாளையம், சாஸ்தா நகரை சேர்ந்த மாரிக்கனி,21; மனைவியுடன் அங்குள்ள வாரச்சந்தைக்கு பைக்கில் சென்றார். மனைவியை இறக்கி விட்டு, ரோட்டோத்தில் பைக்கை நிறுத்த முயன்ற போது, திடீரென ஆட்டோ வந்ததால் பிரேக் போட்டார். அப்போது, எல்.ஐ.சி., காலனியை சேர்ந்த கோகுல்பிரசாத் பைக் மீது, மாரிக்கனி பைக் மோதியது. இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. கோகுல் பிரசாத் ஆத்திரமடைந்து ெஹல்மெட்டால் தாக்கியதில் மாரிக்கனி தலையில் காயம் ஏற்பட்டது. புகாரின் பேரில், செல்வபுரம் போலீசார் விசாரித்து கோகுல் பிரசாத்தை கைது செய்தனர்.