உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பழங்குடியின மக்களுக்கு உதவி 

பழங்குடியின மக்களுக்கு உதவி 

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, உதவும் உறவுகள் அறக்கட்டளை சார்பில், பழங்குடியின மக்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன. பொள்ளாச்சி உதவும் உறவுகள் அறக்கட்டளை சார்பில், 25 குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி, நவமலையில் நடந்தது. நிறுவனர் வினோத்குமார், தலைமை நிர்வாகி அஸ்வின்குமார், நிர்வாகிகள், அறங்காவலர்கள் பங்கேற்றனர். வால்பாறை ரோட்டில் சாலை விபத்தில் இறந்த குடும்பம் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது, என, அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி