உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஏல விற்பனையில் அதிக விலை

ஏல விற்பனையில் அதிக விலை

அன்னுார்; தேங்காய் ஏல விற்பனையில் கூடுதல் விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.அன்னுார், சத்தி ரோட்டில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், தேங்காய் ஏல விற்பனை நேற்று துவங்கியது. அன்னுார் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த விவசாயிகள், தேங்காய் மற்றும் தேங்காய் பருப்பு, ஏல விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.செக்கு எண்ணெய் தயாரிப்பாளர்கள் மற்றும் சந்தை வியாபாரிகள் கொள்முதல் செய்ய வந்திருந்தனர். இதில் தேங்காய் ஒரு கிலோ குறைந்தது 45 ரூபாய் முதல், அதிகபட்சம் 52 ரூபாய் 60 பைசா வரை, விற்பனையானது. தேங்காய் பருப்பு ஒரு கிலோ 136 ரூபாய் 90 பைசா முதல், அதிகபட்சம் 151 ரூபாய் 60 பைசா வரை விற்பனையானது.விவசாயிகள் கூறுகையில், 'தேங்காய் கொப்பரைக்கு வெளிச்சந்தையை விட கூடுதல் விலை கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது,' என்றனர்.கோவை விற்பனை குழு முதுநிலை செயலாளர் ஆறுமுக ராஜன் கூறுகையில், கோவை மாவட்டத்தில் ஆனைமலை, கிணத்துக்கடவு மற்றும் தொண்டாமுத்தூரில் மட்டும் தேங்காய் ஏல விற்பனை நடந்து வந்தது. தற்போது இங்கும் துவங்கியுள்ளது. விவசாயிகள் புதன் தோறும் இங்கு தேங்காய் மற்றும் தேங்காய் கொப்பரையை இங்கு கொண்டு வந்து விற்கலாம். உடனே அவர்களது வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படும்.விற்க முடியாவிட்டாலும் இங்கு இருப்பு வைக்கலாம். இருப்பு வைக்கும் விளை பொருட்களுக்கு அதனுடைய மதிப்பில் 75 சதவீதம் குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படும். வியாபாரிகளும் இங்கு இருப்பு வைத்து பின்னர் நல்ல விலை வரும்போது விற்கலாம்.விவசாயிகள் எந்த இடைத்தரகர் கட்டணமும் செலுத்த தேவையில்லை. அடுத்து வாழைத்தார் மற்றும் பருத்தி ஏல விற்பனை செய்ய உள்ளோம், என்றார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.விற்பனை கூட கண்காணிப்பாளர் சந்திரசேகர் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ