உள்ளூர் செய்திகள்

விலை உயருது தக்காளி

தொண்டாமுத்துார்; தொண்டாமுத்துார் வட்டார விவசாயிகள், விளைபொருட்களை தொண்டாமுத்துார் மற்றும் பூலுவபட்டி தினசரி காய்கறி மார்க்கெட்டில் விற்கின்றனர். பூலுவபட்டி தினசரி காய்கறி மார்க்கெட்டில், இரு நாட்களுக்கு முன், 14 கிலோ ஒரு டிப்பர் தக்காளி, 150 ரூபாய்க்கு விற்பனையானது. தக்காளி வரத்து குறைய துவங்கியுள்ளதால், நேற்று 14 கிலோ எடை கொண்ட ஒரு டிப்பர் தக்காளி, 300 ரூபாய்க்கு விற்றது. வரத்து அதிகரித்ததால், 40 ரூபாய்க்கு விற்ற ஒரு கிலோ வெண்டை, நேற்று 20 ரூபாய்க்கும், கத்தரி, 50 ரூபாய்க்கும், பச்சை மிளகாய், 50 ரூபாய்க்கும் விற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ