உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மலையிட பாதுகாப்பு குழும கிராம பகுதிகளில் கனரக வாகனங்கள் பயன்படுத்த கிடுக்கிப்பிடி

மலையிட பாதுகாப்பு குழும கிராம பகுதிகளில் கனரக வாகனங்கள் பயன்படுத்த கிடுக்கிப்பிடி

கோவை: 'பேரூர் வட்டத்தில், மலையிட பாதுகாப்பு குழும கிராமங்களின் எல்லையில் இருந்து ஒரு கி.மீ., துாரத்துக்குள் கனரக வாகனங்களை பயன்படுத்த, ஜி.பி.எஸ்., கருவி பொருத்தி, பதிவு செய்திருப்பதோடு, தாசில்தாரிடம் அனுமதி பெற வேண்டும். இல்லையெனில், பறிமுதல் செய்யப்படும்' என, கலெக்டர் கிராந்திகுமார் எச்சரித்துள்ளார்.கோவை மாவட்டத்தில், பேரூர் வட்டத்துக்கு உட்பட்ட நரசீபுரம், வெள்ளிமலைபட்டினம், தேவராயபுரம், கலிக்கநாயக்கன்பாளையம், இக்கரை போளுவாம்பட்டி, மத்வராயபுரம், ஆலாந்துறை, பூலுவபட்டி, தென்கரை, மாதம்பட்டி, தீத்திபாளையம், பேரூர் செட்டிபாளையம், சுண்டக்காமுத்துார், எட்டிமடை, மாவுத்தம்பதி மற்றும் தொண்டாமுத்துார் ஆகிய கிராமங்கள், தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை உத்தரவுப்படி, மலையிட பாதுகாப்பு குழும கிராமப் பகுதியாக வரையறுக்கப்பட்டுள்ளது.இக்கிராம பகுதிகளில் தொழிற்சாலை அமைப்பது; கட்டுமானப் பணி மேற்கொள்வது; நில அமைப்பை மாற்றுவது தொடர்பான இனங்களுக்கு மலையிட பாதுகாப்பு குழுமத்தின் அனுமதி பெறுவது கட்டாயம்; இதை மீறுவது சட்டப்படி குற்றம்.இப்பகுதிகளில் கனரக வாகனங்களை பயன்படுத்தி, நடைபெறும் அனைத்து செயல்பாடுகளுக்கும் தாசில்தாரின் அனுமதியை பெறுவது கட்டாயம். பேரூர் வட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில், மண் வெட்டியெடுக்க பயன்படுத்தப்படும் கனரக இயந்திரங்கள் மற்றும் வாகனங்களை முறையாக பதிவு செய்திருக்க வேண்டும்; அவற்றில், ஜி.பி.எஸ்., கருவி பொருத்தியிருக்க வேண்டும்.மலையிட பாதுகாப்பு குழும, கிராம வனப்பகுதி எல்லையில் இருந்து ஒரு கி.மீ., துாரத்துக்குள் கன ரக வாகனங்களை பயன்படுத்தி, நடைபெறும் அனைத்து செயல்பாடுகளுக்கும் தாசில்தாரிடம் அனுமதி பெறுவது அவசியம். இதை பின்பற்ற தவறினால், வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, விதிமுறைக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும், என, கலெக்டர் கிராந்திகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

N DHANDAPANI
டிச 04, 2024 08:52

இந்த புதிய வழிகாட்டுதலை அறிவித்துள்ள கோவை மாவட்ட ஆட்சியரை பாராட்டும் வேளையில், கோவை வடக்கில் நரசிம்ம நாயக்கன்பாளையம் உட்பட இதர கிராமங்களை ஏன் இந்த பட்டியலில் சேர்க்கவில்லை என்கின்ற குழப்பத்தையும் அவர் நீக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை