உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பல்கலை டேபிள் டென்னிஸ் இந்துஸ்தான் கல்லுாரி சாம்பியன்

பல்கலை டேபிள் டென்னிஸ் இந்துஸ்தான் கல்லுாரி சாம்பியன்

கோவை: அண்ணா பல்கலை, 10வது மண்டலத்துக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையேயான டேபிள் டென்னிஸ் போட்டி, நேரு இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி வளாகத்தில் நடந்தது. பெண்களுக்கான இப்போட்டியில், ஆறுக்கும் மேற்பட்ட கல்லுாரி அணிகள் பங்கேற்றன. பல்வேறு சுற்றுகளை அடுத்து நடந்த முதல் அரையிறுதியில், கற்பகம் இன்ஜினியரிங் கல்லுாரி அணி, 3-0 என்ற செட் கணக்கில் மகாலிங்கம் இன்ஜினியரிங் கல்லுாரி அணியை வென்று, இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இரண்டாம் அரையிறுதியில், இந்துஸ்தான் இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி அணி, 3-0 என்ற செட் கணக்கில், தனலட்சுமி சீனிவாசன் இன்ஜினியரிங் கல்லுாரி அணியை வென்றது. பரபரப்பான இறுதிப்போட்டியில், இந்துஸ்தான் கல்லுாரி அணி, 3-0 என்ற செட் கணக்கில் கற்பகம் கல்லுாரி அணியை வென்று, 'சாம்பியன்' பட்டத்தை தட்டியது. வெற்றி பெற்ற அணிகளுக்கு, நேரு இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி முதல்வர் மணியரசன் பரிசுகள் வழங்கினார். சாம்பியன்ஷிப் வென்ற அணியை, இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் செயலாளர் சரஸ்வதி கண்ணய்யன், முதல்வர் ஜெயா, உடற்கல்வி இயக்குனர் ரவிக்குமார் ஆகியோர் வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை