உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / எதிர்காலத்திற்கு மாணவர்களை தயார்ப்படுத்தும் இந்துஸ்தான்

எதிர்காலத்திற்கு மாணவர்களை தயார்ப்படுத்தும் இந்துஸ்தான்

இந்துஸ்தான் இன்டர்நேசனல், வெற்றிகரமான மாணவர்களை உருவாக்கும் தனது பத்தாவது வருட பயணத்தை தொடர்கிறது. கோவை நவ இந்தியா, அவிநாசி ரோடு பகுதியில், இந்துஸ்தான் இன்டர்நேசனல் பள்ளி, பிளே ஸ்கூல் முதல் கிரேடு எட்டு வரை, கேம்பிரிட்ஜ் பாடத்திட்டத்தில் செயல்பட்டு வருகிறது.திறமை வாய்ந்த பயிற்சி பெற்ற ஆசிரியர்களோடு செயல்படும் இப்பள்ளி, 15 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற சிறப்பு விகிதாச்சாரத்தில் செயல்பட்டு வருகிறது. பாட வகுப்புகளுக்கு இணையாக செயல்முறை வகுப்புகளும் நடத்தப்படுகின்றன. பள்ளிகளுக்கு இடையே நடக்கும் ஐக்கிய நாடுகள் மாதிரி மாநாடு நிகழ்வுகளில், மாணவர்கள் பங்கேற்கும் மிகப்பெரிய வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.மூன்றாம் வகுப்பு முதல் ரோபோடிக்ஸ் ஏ.ஐ.,வகுப்புகள் கற்றுத் தரப்படுகின்றன. தமிழ் மொழியுடன் ஹிந்தி, பிரெஞ்சு மொழிகளும் பயிற்றுவிக்கப்படுகின்றன. கால்பந்து, கூடைப்பந்து, பால் பேட்மிட்டன், வில் வித்தை போன்ற விளையாட்டு வகுப்புகள் சிறந்த பயிற்சியாளர்களை கொண்டு கற்றுத் தரப்படுகின்றன.பரதநாட்டியம், இசை மற்றும் மேற்கத்திய நடனம் போன்ற கலைகள், தேர்ந்த முழு நேர ஆசிரியர்களை கொண்டு கற்பிக்கப்படுகின்றன. அனுபவத்தை நேரடியாக வழங்கும் இடங்களுக்கு அழைத்துச் சென்று பாடங்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன. சிற்பக் கலைக்கூடம், விவசாயம் அதை சார்ந்த இடங்கள் போன்றவைக்கு மாணவர்கள் நேரடியாக அழைத்து செல்லப்படுகின்றனர்.கணினி, புவியியல், வேதியல், உயிரியல் மற்றும் கணிப்பொறி ஆய்வகம், சிறந்த நுாலகம் போன்ற மாணவர்களுக்கு தேவையான பயிற்றுவிக்கும் இடங்கள், சிறப்பான தரமான உள்கட்டமைப்பு வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது.மாணவர்களை எதிர்கால உலகத்திற்கு தயாராக்கும் தொலைநோக்கு பார்வையுடன், இந்துஸ்தான் சர்வதேசபள்ளி செயல்பட்டு வருகிறது. விஜயதசமியை முன்னிட்டு தற்போது மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ