உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை: பா.ஜ., அமைப்பு செயலாளர் ஆலோசனை

உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை: பா.ஜ., அமைப்பு செயலாளர் ஆலோசனை

கோவை; மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வரும் 25ல் கோவைக்கு வருகை தருவதையொட்டி, பா.ஜ., அமைப்பு பொதுச்செயலாளர் கட்சி நிர்வாகிகளுடன், நேற்று ஆலோசனை மேற்கொண்டார்.கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 25ம் தேதி வருகை தருகிறார்.இதற்கான ஏற்பாடுகளை செய்வது தொடர்பான ஆலோசனைக்கூட்டம், வி.கே.கே.மேனன் சாலையிலுள்ள மாவட்ட பா.ஜ.,அலுவலகத்தில் நேற்று நடந்தது. பா.ஜ.,மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் தலைமை வகித்தார்.அதில், மாநில அமைப்பு பொது செயலாளர் கேசவ விநாயகம் பேசுகையில், ''கோவைக்கு வருகை தரும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கோவை விமான நிலையத்தில் ஜமாப், பஞ்சவாத்தியங்கள் உள்ளிட்ட மேளதாளங்கள் முழங்க வரவேற்பு அளிக்க வேண்டும். வழிநெடுக தோரணங்களும் கட்சிக்கொடிகளும், அலங்கார வளைவுகளும் அமைத்து, அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க வேண்டும். ஒவ்வொரு பணிகளையும் ஒவ்வொரு குழுக்கள் வசம் ஒப்படைக்க வேண்டும்,'' என்றார்.பா.ஜ.,எம்.எல்.ஏ., வானதிசீனிவாசன், மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், மாநில துணைத்தலைவர் கனக சபாபதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை