உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஜெம் மருத்துவமனை தலைவருக்கு கவுரவம்

ஜெம் மருத்துவமனை தலைவருக்கு கவுரவம்

கோவை: ஜப்பானின், ஒசாகாவில் ஜப்பான் தொராசிக் அறுவை சிகிச்சை சங்கத்தின், 78வதுஆண்டு அறிவியல் மாநாடு நடந்தது. இதில், ஜெம் மருத்துவமனையின் தலைவரும், நுண்துளை ஊடுருவல் அறுவை சிகிச்சை பிரிவின் தலைமை அறுவை சிகிச்சை நிபுணருமான பேராசிரியர் பழனிவேலுக்கு, மதிப்புமிக்க வெளிநாட்டு கவுரவ உறுப்பினர் பதவி வழங்கி கவுரவிக்கப்பட்டது. மாநாட்டின் தலைவரும், கிண்டாய் பல்கலையின் உணவுக்குழாய் இரைப்பை அறுவை சிகிச்சை பிரிவின் பேராசிரியருமான தகுஷி யசுடா, ஜப்பான் முழுவதும் பேராசிரியர் பழனிவேலுவின் நுண்துளை உணவுக்குழாய் அறுவை சிகிச்சையில், புரட்சிகரமான பங்களிப்புகளை அங்கீகரித்து இந்த கவுரவத்தை வழங்கினார். மாநாட்டில், டாக்டர் பழனிவேலு சர்வதேச தொராசிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள் முன்னிலையில், குறைந்தபட்ச ஊடுருவும் உணவுக்குழாய் அறுவை சிகிச்சை குறித்து சிறப்புரை நிகழ்த்தினார். ஜப்பான் தொராசிக் அறுவை சிகிச்சை சங்க மாநாட்டில், ஜெம் மருத்துவமனை தலைவர் பழனிவேலுவுக்கு, மதிப்புமிக்க வெளிநாட்டு கவுரவ உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை