உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மேற்கு மண்டல தபால் துறையில்  சிறப்பான பணிக்கு கவுரவம்

மேற்கு மண்டல தபால் துறையில்  சிறப்பான பணிக்கு கவுரவம்

கோவை; மேற்கு மண்டல தபால் துறையில், சிறப்பாக பணியாற்றிய ஊழியர்கள், 132 பேருக்கு சான்றிதழ், கேடயம் வழங்கப்பட்டது.தபால் துறையில் உள்ள பல்வேறு திட்டங்களில், தங்கள் பங்களிப்பை சிறப்பாக வழங்கும் ஊழியர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. நடப்பாண்டு, மேற்கு மண்டல தபால் துறையில் சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு விருது வழங்கும் விழா, கோவை வேளாண் பல்கலைக் கழகத்தில் நேற்று நடந்தது.தபால் துறையின் மேற்கு மண்டல இயக்குனர் அகில் நாயர் வரவேற்றார். தபால் துறையின் சாதனைகள் குறித்து, உதவி இயக்குனர் (வணிகம்/ஆயுள் காப்பீடு) ஜெயகீதா விளக்கினார்.மேற்கு மண்டல போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் சரவணன் தலைமை வகித்து, தபால் சேமிப்பு திட்டம், ஆயுள் காப்பீடு, பிரதம மந்திரியின் 'ஜன் சுரக்ஷா' திட்டம், ஆதார் பரிவர்த்தனை உட்பட பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக பங்களித்த, 132 பேருக்கு சான்றிதழ், கேடயம் வழங்கினார். கோவை கோட்டத்துக்கு, சிறந்த செயல்பாடு பிரிவில் 4, தனி நபர் பிரிவில் 11 என, 15 பரிசுகள் வழங்கப்பட்டன. மேற்கு மண்டலத்தில், கோவை அஞ்சல் கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் சிவசங்கர் உட்பட, திருப்பூர், நீலகிரி, தர்மபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், திருப்பத்துார் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த அஞ்சலக கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர்கள், துறை சார்ந்தவர்கள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை