சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு குடியரசு தினவிழாவில் கவுரவம்
கோவை; மாவட்ட நிர்வாகம் சார்பில் நேற்று வ.உ.சி.,பூங்கா மைதானத்தில் நடந்த குடியரசு தின விழாவில் சிறப்பாக பணி புரிந்தவர்களுக்கு முதல்வரின் காவலர் பதக்கங்களும் சிறப்பு நற்சான்றிதழ்களையும் வழங்கி கலெக்டர் கவுரப்படுத்தினார்.கோவை, வ.உ.சி., மைதானத்தில் நேற்று காலை நடந்த குடியரசு தின விழாவில், கலெக்டர் கிராந்திகுமார், தேசியகொடிஏற்றி போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். வண்ணபலுான்களை வானில் பறக்கவிட்டார்.தொடர்ந்து, சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் மொழிப்போர் தியாகிகளின் வாரிசுதாரர்களுக்கு கலெக்டர் பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினார்.கோவை மாநகர போலீஸ்சார்பில் சிறப்பாக பணியாற்றிய பல்வேறு நிலையிலான, 61 போலீசாருக்கும், கோவை ரூரல் போலீஸ் சார்பில் சிறப்பாக பணியாற்றிய பல்வேறு நிலையிலான, 34 போலீசாருக்கு, என மொத்தம், 95 நிலையிலான போலீசாருக்கு தமிழக முதல்வரின் காவலர் பதக்கங்களை கலெக்டர் வழங்கினார்.மேலும், சிறப்பாக பணியாற்றிய, 45 போலீஸ் அலுவலர்களுக்கும் மற்றும் துறை தலைமை அலுவலர்கள், டாக்டர்கள், அரசு அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட, 142 நபர்களுக்கு நற்சான்றிதழ்களையும் கலெக்டர் வழங்கினார்.பி.எஸ்.ஜி., கல்லுாரி மாணவியரின் பரதநாட்டியம், டாடாபாத் மாநகராட்சி பள்ளி மாணவியரின், படுகர் நடனம், பிஷப் அம்ப்ரோஸ் கல்லுாரி மாணவர்களின், ரெட்டியாரூர் என்.ஜி.என்.ஜி., பள்ளி மாணவியரின் தேவராட்டம், ஆர்.எஸ்புரம் நேரு மஹாவித்யாலய பள்ளி மாணவியரின் நடனம், கல்லுாரி மாணவ மாணவிர்களின் கரகாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளை பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் அனைவரும் கண்டுகளித்தனர். சிறப்பாக கலைநிகழ்ச்சிகள் மேற்கொண்ட பள்ளி மாணவர்களுக்கு கலெக்டர் கிராந்திகுமார் பரிசுகளை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் மேற்கு மண்டல ஐ.ஜி., செந்தில்குமார் போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர், ரூரல் எஸ்.பி.,கார்த்திகேயன், டி.ஐ.ஜி.,சசிமோகன் மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, உதவி கலெக்டர் (பயிற்சி) அங்கித் குமார் ஜெயின், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைதிட்ட இயக்குநர் (பொ) மதுரா, வருவாய் கோட்டாட்சியர்கள்கோவிந்தன், ராம்குமார் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், அனைத்துத்துறை அரசுப்பணியாளர்கள் பங்கேற்றனர்.