உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நிரந்தர ஊனம் வராமல் தடுப்பது எப்படி? மருத்துவ மாணவர்களுக்கு விழிப்புணர்வு 

நிரந்தர ஊனம் வராமல் தடுப்பது எப்படி? மருத்துவ மாணவர்களுக்கு விழிப்புணர்வு 

கோவை: கோவை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், உடலியல் மற்றும் மறுவாழ்வு பிரிவு சார்பில், இந்திய உடலியல் மற்றும் மறுவாழ்வு தினம், மருத்துவமனை அரங்கில் கொண்டாடப்பட்டது. 'ஊனம் வரும் முன் தடுப்பதில், மறுவாழ்வுத்துறையின் பங்கு' என்ற கருப்பொருள் அடிப்படையில் நிகழ்வு நடத்தப்பட்டது. இந்நிகழ்வில், விபத்து நடந்த நபரை எவ்வாறு மருத்துவமனைக்கு கொண்டு வரவேண்டும், மருத்துவமனையில் எவ்வாறு கையாள வேண்டும், முதலுதவிகள், நிரந்தர ஊனம் வராமல் தடுக்கும் வழிமுறைகள், ஊனம் காரணமாக வரும் பின் விளைவுகள் தவிர்த்தல், உடல் உறுப்பு இயக்க பயிற்சிகள், பிறவி ஊன குறைபாடு தவிர்த்தல், சர்க்கரை கட்டுப்பாடு குறித்து மருத்துவ மாணவர்களுக்கு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மருத்துவ மாணவர்கள், டாக்டர்கள், நர்சிங் மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் என்ற ஐந்து பிரிவுகளில் ஓவியம் மற்றும் கவிதை போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. எலும்பியல் பிரிவு இயக்குனர் டாக்டர் வெற்றிவேல் செழியன், பொது மருத்துவத்துறை தலைவர் டாக்டர் சிவக்குமார், மருத்துவமனை கண்காணிப்பாளர் கண்ணதாசன், ஆர்.எம்.ஓ., சரவணப்பிரியா, உடலியல் மற்றும் மறுவாழ்வு மருத்துவத்துறை உதவி பேராசிரியர் டாக்டர் பத்ம ராணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி