மனிதவள மேம்பாட்டு அதிகாரிகள் கலந்துரையாடல்
கோவை; ஈச்சனாரியில் உள்ள ரத்தினம் கல்வி குழும வளாகத்தில், பல்வேறு நிறுவனங்களின் மனிதவள மேம்பாட்டு அதிகாரிகள் பங்கேற்ற, கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. கல்விக்குழுமங்களின் தலைவர் மதன் செந்தில் தலைமை வகித்தார். முன்னணி நிறுவனங்களின் மனிதவள மேம்பாட்டு அதிகாரிகள், வேலைவாய்ப்புத்துறை அதிகாரிகள், பேராசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பட்ட கல்வியாளர்கள், மாணவர்களுடன் கலந்துரையாடினர். மாணவர்கள் முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவது எப்படி; அதற்கு தேவையான திறன், பணியின் நிர்வாகத்திறன் மற்றும் கல்வி நிறுவனங்களும், பன்னாட்டு தொழில் நிறுவனமும் இணைந்து, எவ்வாறு மாணவர்களின் அறிவை மேம்படுத்துவது என்பது குறித்து எடுத்துரைக்கப்பட்டது. 20க்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவனங்களின் அதிகாரிகள், 1000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். ரத்தினம் கல்வி குழுமங்களின் இயக்குனர் சீமா செந்தில், செயலாளர் மாணிக்கம், துணை தலைவர் நாகராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.