உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பல்லுயிர்கள் இல்லாமல் மனித குலம் வாழ முடியாது

பல்லுயிர்கள் இல்லாமல் மனித குலம் வாழ முடியாது

வடவள்ளி; கோவை சட்டக்கல்லுாரி சார்பில், 'இந்தியாவில் வன உயிரினங்களுக்கு எதிரான குற்றங்களை குறைப்பது; சட்ட அமலாக்கம் மற்றும் குற்ற வழக்கு தொடர்பை வலுப்படுத்துதல்' என்ற தலைப்பில், இறுதியாண்டு மாணவர்களுக்கான, ஒருநாள் தேசிய கருத்தரங்கு நேற்று நடந்தது. கல்லுாரி முதல்வர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். தமிழ்நாடு மாநில வனவிலங்கு வாரிய உறுப்பினர் காளிதாசன் பேசுகையில், ''இவ்வுலகில் மனித குலம் தோன்றுவதற்கு பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே பல்லுயிர்கள் தோன்றின. இவ்வுலகம், மனித குலத்துக்கானது மட்டும ல்ல; பல்லுயிர்களுக்கும் சொந்தமானது. மனித குலம் இல்லாமல் பல்லுயிர்கள் வாழும். பல்லுயிர்கள் இல்லாமல் மனித குலம் வாழ முடியாது. எனவே, பல்லுயிர்களை பேணிக்காக்க வேண்டியது நமது தலையாய கடமை,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை