உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஏழு நிமிடங்களில் சாம்பலாகிப் போக மனமில்லை

ஏழு நிமிடங்களில் சாம்பலாகிப் போக மனமில்லை

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் மகாதேவபுரத்தை சேர்ந்தவர் பாபு, 75. இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர். பாபு தனது உடலை கோவை இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லுாரிக்கு தானமாக தருவதாக எழுதி கொடுத்துள்ளார்.இதுகுறித்து பாபு கூறியதாவது:-கடந்த 47 ஆண்டுகளாக இ.எஸ்.ஐ., தவிர வேறு எந்தவொரு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றதில்லை. இ.எஸ்.ஐ., மருத்துவ செக்கப், ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் காரணமாக எனக்கு எந்தவொரு பெரிய பாதிப்பும் ஏற்பட்டதில்லை. உடல் நிலை சரியில்லாமல் படுத்ததும் இல்லை. வாழ்க்கையின் ஆரம்பம் முதல் இதுவரையில் மிகச்சரியாக திட்டமிட்டே வாழ்ந்துள்ளேன். அவ்வாறு வாழ்ந்து மரணமடையும் போது, மின் மயானத்தில் வெறும் ஏழு நிமிடங்களில் சாம்பலாகிப் போக மனமில்லை. நான் மறைந்தாலும் என்னால் பல பேருக்கு உதவிட வேண்டும் என்பதே எனது ஆசை. அந்த ஆசை இப்போது நிறைவேறியுள்ளது. என் உடல் தானம் விழிப்புணர்வாக அமைய வேண்டும். மருத்துவ படிப்புக்கு உடல் தானம் மிகவும் அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.-----


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை