உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அடையாள அட்டை வழங்கும் முகாம்

அடையாள அட்டை வழங்கும் முகாம்

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில், சுகாதாரத்துறை மற்றும் கோவை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் துறை சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கும் முகாம் நடந்தது.மாவட்ட அரசு தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ராஜா தலைமை வகித்தார். முகாமில், மனநலம், குழந்தைகள் நலம் மற்றும் எலும்புமுறிவு, கண், காது, மூக்கு, தொண்டை டாக்டர்கள் பங்கேற்று பரிசோதனை செய்தனர். முகாமில், 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.இதே முகாம், இன்றும், நாளையும் (6, 7ம் தேதி) நடக்கிறது. மேலும், 11ம் தேதியும் நடைபெறும், என, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை