பயோ செப்டிங் பொருத்தினால் கழிவுநீர் என்று ஒன்றே இருக்காது
ம னித கழிவுநீர் நிலத்தடி நீரில் கலப்பதால், நகர்ப்புறங்களில் நிலத்தடி நீரை குடிக்க முடியாத சூழல் உள்ளது. நாம் உபயோகிக்கும் மனித கழிவு தொட்டியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் நிலத்தில் கலப்பதே இதற்கு காரணம். நம் மனித கழிவு தொட்டி கட்டும் முறைகுறைந்த அளவில் உள்ள குடியிருப்புகளுக்கு மட்டுமே உகந்தது. அடர்த்தியான குடியிருப்புகளின் கழிவு நீர் அதிகப்படியாக நிலத்தில் கலக்கிறது. இதனால், நிலத்தடி நீர் பாதிப்புக்கு உள்ளாகி விட்டது. இன்று கிராம புறத்திலும் அடர்த்தியான குடியிருப்புகள் வர தொடங்கி விட்டது. ஒவ்வொரு கழிப்பறைக்கும் பயோ செப்டிக் டேங்க் பொருத்தி விட்டால் கழிவுநீர் என்ற ஒன்று இல்லை.மாசற்ற பூமியை உருவாக்குவதில் அப்துல் கலாம் கண்ட கனவை மாணிக்க அத்தப்ப கவுண்டர் டி.ஆர்.டி.ஒ., நிறுவனம் 1991ல் நனவாக்கியது. பயோ செப்டிக் டேங்க் உருவாக்கி உலக காப்புரிமம் பெற்றது. கடந்த 30 வருடங்களாக நல்ல முறையில் இயங்கி வருகிறது. ஆனால் மக்கள் பயன்பாட்டுக்கு எளிதில் கிடைக்கும் வகையில், தன் சொந்த முயற்சியில் பல கோடி முதலீடு செய்து டி.ஆர்.டி.ஒ.., வின் விலை மதிப்பற்ற தொழில்நுட்பத்தை மக்களுக்கு மலிவான விலையில் கடந்த 7 வருடங்களாக கொடுத்து வருகிறார். இதன் நோக்கம் எல்லா உயிரினங்களும் வாழ வகை செய்யும் படி பூமி தாயை சுத்தம் செய்வது மற்றும் சுத்தமாகவே வைத்துக் கொள்வது ஒரு வீட்டுக்கு லட்சம் செலவு செய்து சாதாரண கழிவு தொட்டி (பழைய முறை செப்டிக் டேங்க்) அமைத்து பூமி தாயை மாசுபடுத்தாமல், சுமார் 70,000 வரை முதலீடு செய்து பயோ செப்டிக் டேங்க் பொருத்துங்கள். வெளியேறும் நீரை தோட்டத்துக்கு உபயோகியுங்கள். அல்லது பூமியில் விட்டு விடுங்கள். இதனால் பூமியின் நீர் சுத்தமடையும். நிலத்தடி நீர் உயரும். டி.ஆர்.டி.ஒ.,அங்கீகாரம் பெற்ற மேக் பயோ செப்டிக் டேங்க் அமைத்தால் நிலத்தடி நீர் சுத்தமாவதுடன் அடிக்கடி செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் பிரச்சனைகளிலிருந்தும் நிரந்தரமாக விடுபடலாம் டி.ஆர்.டி.ஒ.,அங்கீகாரம் பெற்ற மேக் பயோ செப்டிக் டேங்க் பயன்படுத்தினால், சாக்கடை என்ற ஒன்று உருவாக வாய்ப்பே இல்லை. மேலும் இந்த தொழில் நுட்பத்தின் மூலம் வெளியேறும் நீரானது குடிநீர் பயன்பாட்டிற்கு தவிர மற்ற அனைத்து உபயோகங்களுக்கும் பயன்படுத்தலாம். இதனால், குடிநீர் பற்றாக்குறையே இருக்காது. நிலத்தடி நீர் மட்டமும் உயரும். தமிழக அரசாங்கம் இது போன்ற இயற்கை முறை தொழில்நுட்பங்களை நடைமுறைப்படுத்த முன் வந்து, கட்டாயமாக்க வேண்டும். நமது குழந்தைகளையும் வருங்கால சந்ததியினர்களையும் நினைவில் வைத்து இனிமேலாவது இந்த செயல்பாடுகளை முன்னெடுப்போம்.