உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அப்டேட் ஆகவில்லை எனில் அவுட்டேட் ஆகிவிடுவோம்

அப்டேட் ஆகவில்லை எனில் அவுட்டேட் ஆகிவிடுவோம்

கோவை; ''அப்டேட்' ஆகவில்லை எனில் 'அவுட்டேட்' ஆகிவிடுவோம்,'' என, பேராசிரியர் ஞானசம்பந்தன் பேசினார்.பி.எஸ்.ஜி., அண்ட் சன்ஸ் அறக்கட்டளை சார்பில், பணியாளர்கள் தினவிழா கோவை பி.எஸ்.ஜி., கலை, அறிவியல் கல்லுாரி வளாகத்தில் நேற்று நடந்தது.பேராசிரியர் ஞானசம்பந்தன் பேசுகையில்,''இறைவனை இசை வடிவமாக பார்ப்பது நம் வழக்கம். நாம் தொடர்ந்து நம்மை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். 'அப்டேட்' ஆகவில்லை எனில் 'அவுட்டேட்' ஆகி விடுவோம். விஞ்ஞானத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். மூத்தவர்களின் கருத்துக்களை ஏற்றுக்கொள்வோம். இருந்த போதும், அனைத்து தரப்பினரிடமும் கலந்துரையாடலையும் மேற்கொள்ள வேண்டும். இன்று மொபைல் போன்களுக்கு அடிமையாவதால் பிறருடனான கலந்துரையாடல் முற்றிலும் குறைந்துள்ளது,'' என்றார்.முன்னதாக பி.எஸ்.ஜி., கலை, அறிவியல் கல்லுாரி முதல்வர்(பொறுப்பு) செங்குட்டுவன் வரவேற்றார். பி.எஸ்.ஜி., கேர் இயக்குனர் ருத்ரமூர்த்தி தலைமை வகித்தார். பி.எஸ்.ஜி., பள்ளிகள் செயலாளர் நந்தகோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில், பி.எஸ்.ஜி., குழும நிறுவனங்களில், 25 ஆண்டுகள் பணிபுரிந்த ஊழியர்களுக்கு விருதுகள், பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ