உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பாரபட்சமிருந்தால் புகார் செய்யலாம் ஆதிதிராவிடர் நல ஆணையம் தகவல் ஆதிதிராவிடர் நல ஆணையம் தகவல்

பாரபட்சமிருந்தால் புகார் செய்யலாம் ஆதிதிராவிடர் நல ஆணையம் தகவல் ஆதிதிராவிடர் நல ஆணையம் தகவல்

அன்னுார்,; 'அரசின் நலத்திட்டங்களை பயன்படுத்தி வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்,' என ஆதிதிராவிடர் நல ஆணைய உறுப்பினர் அன்னுாரில் தெரிவித்தார். அன்னுாரில் நீடு டிரஸ்ட் சார்பில், அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு, கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடந்தது. அறக்கட்டளை தலைவர் மருதாசலம் தலைமை வகித்தார். நிர்வாகி ராஜன் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணைய உறுப்பினர் செல்வகுமார் பேசுகையில், ஆதிதிராவிடர்கள் பள்ளி, கல்லூரி கல்விக்கும், வெளிநாடு சென்று படிப்பதற்கும் திறன் மேம்பாடு ஆளுமை மேம்பாடு என அனைத்திற்கும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இலவச விடுதி வசதி செய்யப்படுகிறது. தொழில் செய்ய மானியத்துடன் கடன் வழங்கப்படுகிறது. பாரபட்சமாக நடத்தப்படுவதாக தெரிய வந்தால் ஆணையத்துக்கு புகார் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். கல்வி கற்கவும், வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளவும், அரசு நலத்திட்டங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும், என்றார். ஆணைய உறுப்பினர் பொன் தோஸ் நலத்திட்டங்களை விளக்கினார். பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன், தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலாளர் தனபாலன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ