ரூ.10 லட்சத்துக்கு மேல் பணம் எடுத்தால் தெரிவிக்க வேண்டும்
கோவை: வங்கியில் வைப்பு நிதி வைத்திருக்கும் முதியவர்கள் யாராவது, ரூ.10 லட்சத்துக்கு மேல் பணத்தை எடுக்க முயற்சித்தால், அதற்கான காரணத்தை கேட்பதுடன், அதுகுறித்த தகவலை போலீசாருக்கு தெரிவிக்கவும், சைபர் கிரைம் போலீசார், வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர். சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், 'டிஜிட்டல் கைது என மோசடியில், ஈடுபடுபவர்கள் பெரும்பாலும், முதியவர்களை மட்டுமே இலக்காக கொண்டுள்ளனர். முதியவர்கள் என்பதால், தாங்கள் சொல்வதை பயத்திலும், பதற்றத்திலும் செய்வர் என்பதே காரணம். பெரும்பாலும் முதியவர்கள் வங்கிகளில் வைத்துள்ள, வைப்புத்தொகையை தான் மோசடி பேர்வழிகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். இதைக்கருத்தில் கொண்டே, ரூ.10 லட்சத்துக்கு மேலான தொகையை ஒரே கட்டமாக எடுத்தால், அதுகுறித்த தகவல்களை தர வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது' என்றனர்.