உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கள்ளச்சாராயம் விற்றவர் கைது

கள்ளச்சாராயம் விற்றவர் கைது

தொண்டாமுத்துார்; பேரூர் அடுத்த ஆண்டிபாளையத்தில், கள்ளச்சாராயம் விற்பதாக, பேரூர் தனிப்பிரிவு காவலர் சுரேஷ்கோபிக்கு தகவல் கிடைத்தது. ஆண்டிபாளையத்தைச் சேர்ந்த ராஜசேகர்,48 என்பவரிடம், சாராயம் வாங்குவதுபோல, தனிப்பிரிவு காவலர்கள் சுரேஷ்கோபி மற்றும் வருண் காந்தி ஆகியோர் பேசியுள்ளனர். அவர்களை, ஆண்டிபாளையம், மயானத்துக்கு ராஜசேகர் வர கூறியுள்ளார். அங்கு சென்ற காவலர்களுக்கு, ராஜசேகர், 3 லிட்டர் கள்ளச்சாராயத்தை கொடுத்துள்ளார். அவரை பிடித்த காவலர்கள், ராஜசேகரின் வீட்டுக்குச் சென்று சோதனை செய்தபோது, பதுக்கி வைத்திருந்த, 7.25 லிட்டர் சாராயத்தை கைப்பற்றினர். ராஜசேகரையும், பறிமுதல் செய்த 10.25 லிட்டர் கள்ளச்சாராயத்தையும், பேரூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் வழக்குபதிவு செய்து, ராஜசேகரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை