உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விநாயகர் சதுர்த்தி கட்டுப்பாட்டை தளர்த்த இ.ம.க., வேண்டுகோள் 

விநாயகர் சதுர்த்தி கட்டுப்பாட்டை தளர்த்த இ.ம.க., வேண்டுகோள் 

கோவை; விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு, இந்து அமைப்புகளின் மீது விதிக்கப்படும் கட்டுப்பாடுகளை தளர்த்த கோரி, இந்து மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது. கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த, கட்சியின் மாவட்ட தலைவர் இருகூர் நாகராஜன் அளித்த மனு: வரும் ஆக., 27ல் விநாயகர் சதுர்த்தி விழாவை மிகச்சிறப்பாக கொண்டாட, இ.ம.க., விரிவான ஏற்பாடு களை செய்து வருகிறது. விநாயகர் சதுர்த்தி நாளில், பிரதிஷ்டை செய்யப்படும்போதும், விசர்ஜனம் செய்யும்போதும் விநாயகர் சிலைகளுக்கு, போலீசார் மிகப்பெரிய அளவில் கட்டுப்பாடுகளை விதித்து, இந்து அமைப்புகளுக்கு நடைமுறை சிக்கல் ஏற்படுத்துகின்றனர். இந்துக்களின் மனம் பு ண்படுகிறது. தமிழக அரசு மீது மக்களுக்கு வெறுப்புணர்வு ஏற்படுகிறது. அதனால் நடைமுறை சிக்கல்கள் ஏற்படாமல், அரசு விதிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் தளர்த்தி, புதியதாக விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்வதற்கு அனுமதியளித்து, விழாவை விமரிசையாக கொண்டாட ஒத்துழைப்பு நல்க வேண்டும். இவ்வாறு, மனுவில் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை