உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அடிசியாவில் இடம் வாங்க உடனடி கடன் வசதி; மேலாண்மை இயக்குனர் பேட்டி

அடிசியாவில் இடம் வாங்க உடனடி கடன் வசதி; மேலாண்மை இயக்குனர் பேட்டி

கோவை; “உடனடியாக வீட்டுக்கடன் வசதிகளை வங்கிகளில் பெறும் வகையில், ஆவணங்களுடன் விற்பனையை துவக்கியுள்ளோம்,” என, அடிசியா நிறுவனர் மணிகண்டன் தெரிவித்தார். கோவை குரும்பபாளையம் அருகில் அடிசியா வின், வேர்ல்டு ஒன் திட்டத்தில் வீட்டு மனை, வீடுகள் திட்ட துவக்க விழா நேற்று நடந்தது. இது குறித்து அடிசியாவின் நிறுவனர் மற்றும் இயக்குனர் மணிகண்டன் கூறியதாவது: ரியல் எஸ்டேட் துறையில் போட்டிகள் இருந்தாலும், சரியான இடத்தில், சரியான விலையில், தரமான இடங்களை அடிசியா விற்பனை செய்வதால், பல்வேறு திட்டங்களை செயல்படுத்த முடிகிறது. கோவை குரும்பபாளையத்தில் தற்போது அமைந்துள்ள ஒன்வேர்ல்டு 2.0 திட்டம் 14 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. 171 சைட்டுகள் உள்ளன. விலை சென்ட் 15 லட்சம் முதல் துவங்குகிறது. 2 சென்ட் முதல் 7 சென்ட் வரை வாங்க வசதிகள் உள்ளன. விளையாட்டு அரங்கம், பொழுதுபோக்கு அம்சங்கள் என அனைத்து வசதிகளும் இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளன. முதலீடு செய்ய இடம் வாங்குவோருக்கு விற்பனை செய்யவும் உதவி செய்கிறோம். திருச்சி, மதுரை, சென்னை போன்ற இடங்களிலும் அடிசியா திட்டங்களை செயல்படுத்த திட்டமிட்டு வருகிறது. கோவையில் நீலம்பூர், பிச்சனுார், வடவள்ளி, சூலுார் போன்ற இடங்களில் வீட்டுமனை விற்பனையை துவக்க உள்ளோம். வங்கி கடன்களை எளிதாக பெறும் வகையில், அனைத்து தேவைான சட்டப்பூர்வமான ஆவணங்களை தயாரித்து கொடுக்கிறோம். பிற மாவட்டம், வெளிநாடுகளில் இருப்போரும் இங்கு இடங்களை வாங்க வசதிகள் செய்துள்ளோம். ராணுவத்தில் பணிபுரிந்தோருக்கு 5 சதவீத சலுகையையும் அளித்துள்ளோம். இவ்வாறு மணிகண்டன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை