உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விநாயகர் சிலைகள் விசர்ஜனம் ; தயாராகும் சாடிவயல் சின்னாறு

விநாயகர் சிலைகள் விசர்ஜனம் ; தயாராகும் சாடிவயல் சின்னாறு

தொண்டாமுத்துார்; தொண்டாமுத்துார் வட்டாரத்தில், விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு, 176 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. அவை நாளை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, சாடிவயல், சின்னாற்றில் விசர்ஜனம் செய்யப்பட உள்ளன. கடந்தாண்டு சாடிவயல், சின்னாற்றில், 250க்கும் மேற்பட்ட சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டன. இந்தாண்டும், 250க்கும் மேற்பட்ட சிலைகள் விசர்ஜனம் செய்ய வாய்ப்புள்ளது. பேரூர் முதல் சாடிவயல் வரை, 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். சிலைகளை கரைக்க ஏதுவாக, சாடிவயல், சின்னாற்றில் மணல் மூட்டைகளை அடுக்கி தடுப்பு உருவாக்கி, நீரை சேமிக்கும் பணி நடந்து வருகிறது. அப்பகுதியில், கூடுதல் மின் விளக்குகள், 'சிசி டிவி' கேமராக்களை, போலீசார் பொருத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ