உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோர்ட் புறக்கணிப்பு வழக்குகள் பாதிப்பு

கோர்ட் புறக்கணிப்பு வழக்குகள் பாதிப்பு

அன்னுார்; வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பால், நேற்று விசாரணை பாதிக்கப்பட்டது. வழக்குகள் ஒத்திவைக்கப்பட்டன.ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் வக்கீல்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் சக்கரவர்த்தி இரண்டு நாட்களுக்கு முன்பு சமூக விரோதிகளால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதை கண்டித்தும், வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை தமிழக அரசு விரைவில் நிறைவேற்ற கோரியும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஜூன் 16ம் தேதி ஒரு நாள் கோர்ட் புறக்கணிப்பு செய்ய முடிவு செய்யப்பட்டது.இதன்படி அன்னுார் கோர்ட்டில் நேற்று பெரும்பாலான வக்கீல்கள் கோர்ட் பணியை புறக்கணித்தனர். இதனால் வழக்குகள் ஒத்திவைக்கப்பட்டன. விசாரணை பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை