மேலும் செய்திகள்
பல்கலை தேர்வு; மாணவர்கள் சிறப்பிடம்
18-Oct-2025
கோவை: பெரியநாயக்கன்பாளையம், யுனைடெட் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடந்தது. சிறப்பு விருந்தினராக பங்கேற்ற,பாரதியார் பல்கலை பதிவாளர் ராஜவேல், மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தா ர். அவர் பேசுகையில், ''மாணவர்கள் செயற்கை நுண்ணறிவு உட்பட தற்கால தொழில்நுட்பங்களை நன்கு கற்று, சமூ கத்தைமேம்படுத்தவும், சமூகத்திற்கு நன்மை தரும் வகையிலும், ஆக்கப்பூர்வமாக செயலாற்ற வேண்டும், '' என்றார். வணிகவியல், கணினி அறிவியல் மற்றும் ஆங்கில இலக்கிய துறைகளை சார்ந்த 271 மாணவர்கள் பட்டங்களை பெற்றனர். பல்கலை அளவில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்ற மாணவிகள் சவுமி,நவீனா, ஆஷிகா ஆகியோர் சிறப்பு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். யுனைடெட் கல்வி குழுமத்தின் நிறுவனர் பொறியாளர் சண்முகம், நிர்வாக இயக்குநர் கைலாஷ் குமார், செயலாளர் அருண், கல்லுாரி முதல்வர் விஜயா ஆகியோர் பங்கேற்றனர்.
18-Oct-2025